FranceTAMILS

 Breaking News
  • Noisy Le Sec சம்பவம் ! பிரான்ஸ் தமிழர்களை குழப்பிய ஊடகங்கள் !! உண்மை நிலைவரம் என்ன ? பரிசின் புறநகர் Noisy-le-sec பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக நான்கு சிறுவர்கள் உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரென்சு ஊடகங்கள் பலவும் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் பிரான்ஸ் தமிழர்களை வெகுவாக குழப்பியுள்ளன....
  • லூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் !! பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. உலகெங்கும் இருந்தும் பல மில்லியன் மக்கள் கலந்து கொள்கின்ற இப்பெருநாளில் இம்முறை கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள்...
  • பெற்றோர்களுக்கு CAFஇன் நற்செய்தி !! பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது....
  • கொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen ! சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது....

லூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் !!

juillet 17
11:22 2020

பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

உலகெங்கும் இருந்தும் பல மில்லியன் மக்கள் கலந்து கொள்கின்ற இப்பெருநாளில் இம்முறை கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியாகவே மரியன்னையின் ஆராதனைகளை பக்கத்கள் காணக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை 9 மணிக்கு தமிழில் பூசை இடம்பெற்றிருந்தது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட குறைந்தளவிலானவர்களுக்கே நேரடியாக பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக 2 மாத காலத்துக்கு மேலாக தேவாலயம் மூடப்பட்டிருந்த நிலையில் 8 மில்லியன் யூறோக இழப்பினை தேவாலய நிர்வாகம் சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதன் காரணமாக தொழில் இழப்பினை சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கவும், தேவாலயத்தின் இதர தேவைகளை கருத்தில் கொண்டு உலகளாவியரீதியில் நன்கொடை பெறும் செயற்திட்டமும் நேற்று வியாழக்கிழமை பெருநாளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த https://www.lourdes-france.org/lourdes-united/ இந்த இணைப்பின் மூலம் நன்கொடையினை வழங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?