FranceTAMILS

 Breaking News

கொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen !

கொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen !
juillet 14
21:41 2020

சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Suite au recensement de plusieurs cas positifs à la #COVID19, un arrêté a été pris, imposant le port du masque dans tout lieu clos recevant du public au sein de la commune de #SaintOuen.

தொடர்சியாக இரண்டு பாடசாலைகளில் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதுவரை சோதனைக்கு உட்பட்டவர்களில் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 5ம் தேதிl’école maternelle Anatole-Franceசிறுவர் பாடசாலையில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் சில பிள்ளைகளிடம் காணப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் பெற்றோர்களுக்கும், பாடசாலை ஊழியவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பலருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்பகுதி தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் வந்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?