FranceTAMILS

 Breaking News

தொடர்ந்தும் 7 177 பேர் மருத்துவமனைகளில் ! வல்லுனர்கள் எச்சரிக்கை !!

தொடர்ந்தும் 7 177 பேர் மருத்துவமனைகளில் ! வல்லுனர்கள் எச்சரிக்கை !!
juillet 09
20:18 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இன்னமும் 7 177 பேர் மருத்துவமனைகளில் உள்ள நிலையில் கோடைகால விடுமுறையினை மையப்படுத்தி வல்லுனர்கள் அவசர எச்சரிக்கையொன்றினை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளனர்.

சமூக இடைவெளி, சுவாசக்கவசம் அணிதல் போன்ற கண்டிப்பான சுகாதார விதிகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படாவிட்டால் இந்தக் கோடை விடுமுறைக் காலத்தில் வைரஸ் மீண்டும் தீவிரமாக திரும்பிவரும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பிரெஞ்சு அரசுக்கு ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்ட அறிவியல் குழுவே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

பொதுமுடக்கம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் ஆட்களுக்கு இடையே இடைவெளி பேணுதல், மாஸ்க் அணிதல் போன்ற சுகாதார விதிகள் தளர்த்தப்படவில்லை. ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில் இந்த விதிகளைப் பேணுவதில் தளர்வுகள் அவதானிக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் நடத்தைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மீண்டும் வைரஸ் தீவிரமாகப் பரவக்கூடிய ஏதுநிலைகளை உருவாக்கி இருக்கிறது.

இறப்புக்களிலும் தொற்றுக்களிலும் ஏற்பட்ட சரிவைக் கண்டு சுகாதார விதிகள் இனி அவசியம் இல்லை என்ற எண்ணம் எழுவது தெரிகிறது. ஆனால் வைரஸ் முற்றாக நீங்கிப் போய்விடவில்லை.

பொது நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையானோர் நெருக்கமாக கூடுவதையும் முத்தமிடுதல், கட்டியணைத்தல் போன்ற சமூக இடைவெளி மீறல்களையும் எங்கும் அவதானிக்க முடிகிறது.

இந்த விதி மீறல்களால் கோடை விடுமுறைக் காலப்பகுதியில் வைரஸ் மீண்டும் தீவிரமாக திரும்பிப் பரவக்கூடும் என அறிவியல் குழுவின் உறுப்பினர் ஒருவர் எச்சரிக்கின்றார்.

வைரஸின் இரண்டாவது கட்ட அலையை எதிர்கொள்ள நேர்ந்தாலும் நாட்டை முன்னர் போன்று முழுமையாக முடக்கும் திட்டம் இனி இருக்காது. நிலைமைக்கு ஏற்ப தொற்றுப்பரவும் மையங்கள் பகுதியாக முடக்கப்படும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

தற்போது வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட 380க்கு மேற்பட்ட கொத்திடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 79 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 512 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?