FranceTAMILS

 Breaking News

சாத்தான்குள படுகொலைக்கு பரிசில் இருந்து ஓர் கலகக்குரல் !

juillet 09
18:29 2020

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய சாத்தானகுள காவல்நிலை இரட்டைப் படுகொலைக்கு, பரிசில் இருந்து கலகக்குரல் ஒன்று சொல்லிசையில் கண்டனத்தினை பதிவு செய்துள்ளது.

கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டினை மீறியதான குற்றச்சாட்டில் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ஆகிய இருவர், தமிழ்நாட்டின் சாத்தான்குள காவல்நிலையத்தில் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் இந்த அத்துமீறிய வன்முறை என்பது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, பிரான்ஸ் என்று பல நாடுகளிலும் காவல்துறையினரது அத்துமீறல்களுக்கு எதிரான போர்குரல்கள் எழுந்துள்ள இவ்வேளையில், பரிசில் இருந்து இந்த கலகக்குரல் சொல்லிசையில் எழுந்துள்ளது.

புலம்பெயர் இளையோர் வட்டத்தில் நன்று அறியப்பட்ட BRITTO JUDE இசையில், IMN தனது வரிகளுக்கு உயிரோட்டமாக குரல்கொடுத்து நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் பலரும் இப்பாடலை பகிர்ந்து தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?