FranceTAMILS

 Breaking News

கொரோனா பரிசோதனைக்கு தயாராகும் நேரம் !!

கொரோனா பரிசோதனைக்கு தயாராகும் நேரம் !!
juin 27
06:30 2020

கொரோனா வைரஸ் கொத்துக்களாக வெளியே தெரியாமல் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களைக் கண்டறிவதற்காக சோதனை முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

இல் து பிரான்ஸ் பிராந்தியத்தின் சுமார் 30 நகரசபைப் பிரிவுகளைச் சேர்ந்த 13 இலட்சம் பேர் இவ்வாறு வைரஸ் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

தற்போது நாடளாவியியரீதியில் 240க்கும் மேற்பட்ட கொரோனா கொத்து மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது சமூகப்பரவலாக மாறி இரண்டாவது அலையினை பிரான்ஸ் சந்தித்துவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

வரவிருக்கும் இலையுதிர்காலத்திலும் தொடர்ந்து பனிக்காலத்திலும் வைரஸ் மேலும் தீவிரமாகப் பரவக்கூடும் என்று அறிவியல் நிபுணர்கள் குழு எச்சரிக்கின்றனர். அவ்வாறு மீண்டும் வைரஸ் கட்டுமீறிப் பரவினால் எடுக்கப்படவேண்டிய முன்னேற்பாடுகளின் ஒரு கட்டமாக சோதனைகள் இடம்பெற இருக்கின்றன.

பரிசோதனைக்கு மக்களை அழைப்பதற்கான படிவங்கள் தனித்தனியே சகல குடியிருப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன. அரச சுகாதார காப்புறுதி நிறுவனத்தால் (Assurance Maladie) அனுப்பப்படவுள்ள இப் படிவங்களுடன் மக்கள் தாங்களாகவே விரும்பிய பரிசோதனைக் கூடங்களுக்குச் சென்று மூக்கு வழியான வைரஸ் சோதனையைச் செய்து கொள்ளவேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?