FranceTAMILS

 Breaking News

மீண்டும் திறந்தது ஓர்லி ! பறந்தது முதல் விமானம்!!

juin 27
06:10 2020

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைக்கு பின்னராக பரிசின் ஓர்லி விமானம் நிலையம் பயணிகள் போக்குவரத்து திறந்தது.

பொதுமுடக்க நீக்கத்துக்கு பின்னராக முதலாவது பயணிகள் விமானம் நேற்று வெள்ளிக்கிழமைபுறப்பட்டபோது தண்ணீர்த் தாரைகளை வீசி ஆரவாரமாக வழியனுப்பி வைக்கப்பட்டது.

விமான நிலையத்தில் சுகாதார நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதோடு, பயணிகள் அனைவரும் உடல் வெப்ப நிலையை அளவிடப்பட்டே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரான்ஸில் அதிக எண்ணிக்கையான உள்நாட்டு விமான சேவைகளை நடத்தும் நாட்டின் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையம் ஓர்லி இருக்கின்றது.

நாளாந்தம் சுமார் 600 விமானங்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்ட இந்த விமான நிலையத்தில் தற்சமயம் 70 க்குக் குறைவான சேவைகளையே நடத்தமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை இங்கு குறிப்பிடதக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?