FranceTAMILS

 Breaking News

பிரான்சில் மே18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் !

mai 18
07:53 2020

தமிழினத்தின் மீதான பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை சிங்கள பேரினவாத அரசு ஆக்கிரமிப்புச் செய்ய மே18-தமிழீழத் தேசிய துக்க நாளையொட்டில் பிரான்சில் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஆர்ஜொன்தெய் தமிழ்இளையோர்கள் அறிக்கையயொன்றினை விடுத்திருந்ததோடு, உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை கடைப்பிடித்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் புலோமெனில் நகரசபையின் அனுசரணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று நிறுவப்பட்டு அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொதுநிகழ்வுகள் நடத்தப்படுதல் என்பது சவாலாக மாறியுள்ள நிலையில், வீடுகளில் இருந்து சுடர்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சியினை குடும்பத்துடன் உண்டு, அடுத்த சந்த்திக்கு முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட துன்பத்தை எடுத்தியம்புமாறு கோரப்பட்டுள்ளது.

மே18 தமிழினஅழிப்பு நாளினை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்ஸ் செயற்பாட்டாளர்கள் தமிழர் வர்த்தக மையமான லாசப்பலில் தமது பிராச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

மே18, நாளில் பரிசின் பல்வேறு நகரசபைகளின் முன்னாலும் குறிப்பிட்டளவிலான மக்களுடன் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தப்பட இருப்பதாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பு:-கீழே தரப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

*ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இடங்களில் பங்குபற்ற முடியும்

  • ஒருதடவையில் 10 பேர் முகக்கவசம் (masque )அணிந்து
    ஒவ்வொருவருக்கும் இடையில் 1 metre இடைவெளியில் நின்று  நினைவேந்தல் செய்யப்படல் வேண்டும்

காலம்:-18.05.2020 திங்கட்கிழமை

-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம்-பிரான்சு

நேரம்:-14மணிமுதல்-16மணி வரை

-Choisy le Roi
Choisy le roi -Park இற்கு வெளியில்
(park  பூட்டப்பட்டுள்ளது)

நேரம்:- 13மணிமுதல் -15மணி வரை

-Creteil
மாநகர சபைக்கு முன்

நேரம்:-13மணிமுதல் -15மணி வரை

-Ivry sur Seine
மாநகர சபைக்கு முன்

நேரம்:-மதியம் 13மணிமுதல் -15மணி வரை

-Alfortville
மாநகர சபைக்கு முன்

நேரம்:-14மணிமுதல் -16மணி வரை

-Sevran Parc
நினைவுக்கல்  அருகாமையில்
நேரம்:-10 மணிமுதல்

-Le Blanc Mesnil
நினைவுத்தூபிக்கு அருகாமையில்
நேரம்:-10 மணிமுதல் 12  மணி வரை

-La Courneuve
மாநகர சபைக்கு முன்
இடம்:- 14மணிமுதல் -16மணி வரை

-Drancy
மாநகர சபைக்கு முன்

நேரம் :-14மணிமுதல் -16மணி வரை

தொடர்புகளுக்கு:-‭

-066 28 46 606 (தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு- பிரான்சு )
-65 27 25 867 (தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு)

மேலதிக தொடர்புகளுக்கு:-‭
01 43 15 04 21‬(cctf)

தகவல்:- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?