FranceTAMILS

 Breaking News

சுகாதார அறிக்கை திங்கள் : 610 பேர் குணமடைந்தனர் – 437 பேர் உயரிழப்பு !!

சுகாதார அறிக்கை திங்கள் : 610 பேர் குணமடைந்தனர் – 437 பேர் உயரிழப்பு !!
avril 27
19:04 2020

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி கடந்த 24 மணிநேரத்தில் 437 உயிரிழந்துள்ளதோடு, 610 பேர் குணமடைந்தனர் என இன்று திங்கட்கிழமை சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 295 பேர் மருத்துவமனைகளிலும், 142 பேர் மூதாளர் இல்லங்களிலும் இறந்துள்ளனர்.

புதிதாக 3 764 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதோடு, 481 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் தீவிரிசிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தற்போது 28 055 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, 4 608 பேர் தீவிரசிகிச்சைப் பிரவில் உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 128 339ஆக பதிவாகியுள்ளதோடு, இவர்களில் 45 513 பேர் குணமடைந்துள்ளனர். 23 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நாட்களாக உயரிழப்புக்கள் சற்று குறைவடைந்த நிலைக்கு சென்றிருந்த நிலையில், இன்று கொஞ்சம் சற்று அதிகமாகிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?