FranceTAMILS

 Breaking News

ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகனுக்கு கலைப்பெருமக்களின் இரங்கல்கள் !

avril 23
18:26 2020

ஈழத்தமிழ் கலையுலகை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ள மூத்தகலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களுக்கான இரங்கல்களை, புலம்பெயர் ஈழத்தமிழ் கலைப்பெருமக்கள் பதிவாக்கி வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை கலைப்பெருமகனார் ஏ.ரகுநாதன் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார் என்ற துயரமான செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது.

முதியவதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரது இழப்பினால் துயருற்றிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலகிற்கும் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ள கலைப்பெருமக்கள் தமது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து கலைஞர்கள் இக்காணொளித் தொகுப்பில் இணைந்துள்ளதோடு, கலைஞர் விஜிதன் அவர்கள் இதனை ஒருங்கிணைத்து தொகுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?