FranceTAMILS

 Breaking News

ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் !

avril 22
15:20 2020

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.ரகுநாதன் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார் என்ற துயரமான செய்தியினை அறியத்தருகின்றோம் என ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் – பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும்,கடந்த சில நாட்களாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐயா அவர்கள், இன்று மதியம் 14மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிகுக்கும் அவரது குடும்பத்தினருக்கு தோழமையோடு நாம் அனைவரும் நிற்போம் என ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இழப்பினால் துயருற்றிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலகிற்கும் தனது ஆழந்த இரங்கலைத் Francetamils.com தெரிவித்துக் கொள்வதோடு, தனது மரியாதை வணக்கத்தினை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?