FranceTAMILS

 Breaking News

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?
mars 21
13:16 2020

 

 

அனைவரும் அணிய வேண்டியதில்லை.

3 வகையான மக்கள் மட்டும் அணிந்தால் போதுமானது.

1. சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்ட மக்கள்

2.வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கவனித்துக் கொள்வோர்

3. மூச்சு விடுவதில் சிரமம் கொண்ட நோயாளிகளைப் பராமரிக்கும் சுகாதார பணியாளர்கள்.
இவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது.

முறையாக அணிவது எப்படி?

– மாஸ்க்கின் மடிப்புகளை விரித்து, கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

– மூக்கு, வாய், மோவாய் ஆகியவை முழுமையாக மூடுமாறு அணிய வேண்டும்

– அனைத்துப் புறங்களிலும் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

– 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது ஈரமான பிறகு, அதை மாற்றிவிட வேண்டும்.

– ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுவாசக்கவசத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

– பயன்படுத்திய சுவாசக்கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

– சுவாசக்கவசத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கைகளால் தொடக்கூடாது.

– சுவாசக்கவசத்தை கழற்றும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ள வெளிப்புறத்தைக் கட்டாயம் தொடக்கூடாது.

– சுவாசக்கவசத்தை ; கழுத்தில் தொங்க விடக்கூடாது.

– கழற்றியபிறகு கைகளை சுத்திகரிப்பான்களால், முறையாகக் கழுவ வேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?