FranceTAMILS

 Breaking News

45 நாள் முடக்கம் – மேலும் புதிய கட்டுப்பாடுகள் – சுகாதார அவசரநிலை பிரகடனம் !!

mars 20
11:32 2020

பிரான்சில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் , état d’urgence sanitaire சுகாதார அவசரநிலைப் பிரகடனம் முழுமைபெற இருப்பதோடு, மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசியமான தேவைகளைத் தவிர பிற நேரங்களில் வீடுகளில் இருக்க வேண்டும் என்ற அரசாங்கம் அறிவித்திருந்த போதும், பொதுமக்களால் அது முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதாக கூறப்படுகின்றது.

தலைநகர் பரிசின் செயின் நதிக்கரை வீதிகளில் பெருவாரியானவர்கள் ஓட்டம், சைக்கிள் என உடற்பயிற்சி செய்திருந்ததோடு, கடற்கரைப்பகுதிகளிலும் மக்கள் திரண்டுள்ளனர். பொதுச்சந்தைகளில் மக்கள் பெருவாரியாக திரண்டுள்ளனர். சில இடங்களில் பல கூட்டாக (barbeque) இறைச்சி சுட்டுச்சாப்பிட்டமைக்கு 1600 யுறோ தண்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்பட்டுள்ள ஆபத்தினை பொதுமக்கள் புரிந்து கொள்ளாது இலகுவாக விடயங்களை எடுத்துள்ளனர் என அதிபர் ஏமானுவல் மக்ரோன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை அவசியமான காரணங்கள் அன்றி ஒது நாளில் மட்டும் பொது இடங்களில் நடாமாடியமைக்காக 4000 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளமையானது, கட்டுப்பாட்டின் அவசியத்தினை பலர் புரிந்து கொள்ளவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதோடு, இந்நிலை நீடித்தால் 8 இலட்சம் போர் வரை ரைவஸ் தொற்றுக்கு உள்ளாக வேண்டி வரும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் எடுவார்ட் பிலிப்புடன் இன்று வெள்ளிக்கிழமை உயர்மட்ட கூட்டத்தினை கூட்டிய அதிபர் ஏமானுவல் மக்ரோன், இவ்விடயங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

சீனா எவ்வாறு இறுக்கான கட்டுப்பாட்டுடன் வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவந்ததோ, அதுபோல் இறுக்கமான முடிவுகள்தான் பிரான்சுக்கு தற்போது தேவையாகவுள்ளது என உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக லு பரிசியன் பத்திரிகை குறிப்பிடுகின்றது.

முதற்கட்டமாக 15 நாட்களுக்கு விதிக்கப்பட்ட முடக்கம் என்பது 45 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட நேரங்கள் தவிர வெளியில் செல்வது மேலும் இறுக்கப்பட இருக்கின்றது.

état d’urgence sanitaire சுகாதார அவசரநிலையினை முழுமையாக பிரகடனத்துக்கு நாடாளுமன்ற மேற்சபை தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Le Sénat à majorité de droite a adopté, dans la nuit, en première lecture le projet de loi permettant l’instauration d’un état d’urgence sanitaire. Le texte, voté par 252 voix pour, 2 contre et 90 abstentions, sera examiné, dès vendredi 20 mars, par l’Assemblée nationale

சுகதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் பட்சத்தில் மேலும புதிய இறுக்கமான கட்டுப்பாட்டுடன் வைரஸ் தொற்றுக்கு எதிரான போரை பிரான்ஸ் எதிர்கொள்ள இருக்கின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?