FranceTAMILS

 Breaking News

வேலைக்கு செல்பவர்களுக்கு தனியான அனுமதி பத்திரம் !

வேலைக்கு செல்பவர்களுக்கு தனியான அனுமதி பத்திரம் !
mars 18
07:18 2020

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் தடையுத்தரவுகளுககு அமைய, வேலைக்கு செல்பவர்களுக்குரிய தனியான படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்படிவத்தினை ஒவ்வொருமுறையும் வேலைக்கு செல்லும் போது நிரப்ப வேண்டியதில்லை. வேலைத்தள நிர்வாகத்தினால் ஒரு முறையாக நிரப்பபட்டு வேலையாளரிடம் கொடுக்க வேண்டும்.

படிவத்தினை தரவிறக்கம் செய்ய :

justificatif_de_deplacement_professionnel

அதில் வேலையாளரின்
முழுப்பெயர்
பிறந்த திகதி
வதிவிட முகவரி
செய்யும் வேலை
வேலைத்தள முகவரி
வேலைக்கு செல்லும் வழிமுறை
ஆகிய விடயங்கள் வேலைத்தள நிர்வாகத்தினால் நிரப்பபட்டு, பணியாளரிடம் வழங்கப்பட வேண்டும்.

இந்த அனுமதிப்பத்திரம் இல்லாது போனால் 135யுறோ வரை தண்டம் செலுத்த வேண்டியிருக்கும்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?