FranceTAMILS

 Breaking News

பிரான்சில் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளிலும் அறிவிப்புக்கள் வெளிவந்தன !!

பிரான்சில் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளிலும் அறிவிப்புக்கள் வெளிவந்தன !!
mars 12
23:11 2020

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் பிரான்சின் அதிபல் பல்வேறு நடைமுறைகளை வியாழக்கிழமை அறிவித்திருதது போல், பல நாடுகளிலும் அறிவிப்புக்கள் வெளிவந்துள்ளன.

எமது பார்வைக்கு கிட்டிய நாடுகளின் நிலைவரத் தொகுப்பு :

பெல்ஜியம் :

பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டுத்திடல்கள், உணவகங்கள், திரையரங்குகள் என்று மக்கள் கூடுகின்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு பெல்ஜிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் திகதி வரை இந்த தடை உத்தரவு இருக்கும் என பிரதமர் சோபி வில்மேஸ் இன்று இரவு அறிவித்துள்ளார்.

———

கனடா :

எதிர்வரும் வாரம் மார்ச் மாத பாடசாலை விடுமுறையை தொடர்ந்து, மேலும் 2 வாரங்களுக்கு (ஏப்ரல் 5ம் திகதிவரை) ஒன்ராறியோ மாநில பொதுப் பாடசாலைகள் அனைத்தும் கொல்லுயிரி நோய்த்தாக்கம் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படும் என ஒன்ராறியோ மாநில அரசு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

தகவல் : மகிழ்ச்சி ஊடகம்
———

டென்மார்க்

டென்மார்க்கில் அவசரநிலை பிரகடனம்…

டென்மார்க் நாட்டில் அனைத்து பள்ளி கல்லூரிகள் திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்த அரசு சார்பில் பணிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 512 பேர் டென்மார்க்கில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அணுமதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு நலன் பற்றிய அவசரநிலை விதிகள் தனித்தனியாக கடிதம் வாயிலாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—-

நோர்வே :

சலூன் முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்தும் மூடப்படுகிறது

நாட்டின் பெரும்பாலான சமூக கட்டமைப்புக்கள் மூடப்படுவதோடு மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நல காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன-

அனைத்துவித கலை கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும். தலை முடி திருத்தும் சலூன்கள், மசாஜ் நிலையங்கள் அழகியல் சலூன்கள், நீச்சல் தடாகங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக மூடப்படுகின்றது.

போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும். ஆனால் மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள் போன்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதோடு சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்கண்டிநேவிய நாடுகள் தவிர்ந்த உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இருந்து நோர்வேக்கு திரும்பி வருவோர் நோய் அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயமாக 14 நாட்கள் வீடுகளில் இருக்கவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு 27 ஆம் தேதி பெப்ரவரி மாதம் முதல், அதாவது பின்னோக்கிய விதத்தில் அமலுக்கு வரும் என்றும் அரசாங்க அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் இருக்குமென்றும் பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. கடைகள் திறந்திருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் இயங்கும் என்றும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை மார்ச் மாதம் 12ம் தேதி பிற்பகல் 6 மணி முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வரும். தொற்று நோய் தவிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்.இந்த கட்டுப்பாடுகள் முதல் கட்டமாக மார்ச் 26 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்

தகவல் : : oslovoice.no

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?