FranceTAMILS

 Breaking News

300 ஆடற்கலைஞர்களின் பிரமாண்ட நிகழ்வாக « சலங்கை 2020 » !

300 ஆடற்கலைஞர்களின் பிரமாண்ட நிகழ்வாக « சலங்கை 2020 » !
février 10
18:30 2020

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ் 20வது தடவையாக நடாத்தும் « சலங்கை 2020 », இம்முறை 300க்கும் மேற்பட்ட ஆடற்கலைஞர்கள் பங்கெடுக்கும் பிரமாண்ட நிகழ்வாக அமைய இருக்கின்றது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Gymnase Pierre Scohy, 1 Rue AristideBriande, 93600 Aulnay sous bois,  மதியம் 12h மணிக்கு இனிதே தொடங்க இருக்கின்றது. (மண்டபத்தை வந்தடைய … RER B Aulnay -Sous -Bois.. BUS : 617. arret : L’ Herminier . 2 நிமிட நடை .)

பரதக்கலை ஊடாக தமது தனித்துவமான திறன்களை வெளிப்படுத்தும் ஓர் ஆடற்களமாக அமையும் இந்நிகழ்வில், பிரான்ஸ் உட்பட ஜேர்மனி, சுவிஸ் என பல்வேறு இடங்களிலும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்கெடுக்க இருப்பதோடு, சிறப்பு நிகழ்வுகளையும் அரங்கில் வழங்க இருக்கின்றனர்.

இரண்டு நாட்டிய நாடகங்கள் அரங்கை அலங்கரிக்க இருப்பதோடு, ஜேர்மனியில் இருந்து நாட்டிய கலாவித்தகர் செல்வன் நிமலன் சத்தியகுமார் அவர்களது சிறப்பு நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

பரிசின் முன்னணி நிறுவனங்கள் பலதும் இந்நிகழ்வுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளதோடு, FranceTamils.com  இணையம் தனது ஊடக அனுசரணையினை வழங்கியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?