FranceTAMILS

 Breaking News

காவல்துறை பெண்ணை பாலியல் வல்லுறவு கொண்ட தீயணைப்பு வீரர் !

காவல்துறை பெண்ணை பாலியல் வல்லுறவு கொண்ட தீயணைப்பு வீரர் !
février 08
12:43 2020

காவல்துறை பெண் அதிகாரி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 39 வயதுமிக்க தீயணைப்பு வீரர்(?) ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கையடையாளங்கள், மற்றும் மரபணு சோதனை மூலம் குறித்த நபர் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு, பணியில் இருந்த போதே கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, கடந்த ஜனவரி 31ம் நாள், நள்ளிரவு 3 மணி.
காவல்துறை பெண் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை, பின்தொடர்ந்த நபர், அவருடனேயே கட்டிட வாயில்வழியே உள்நுழைந்துள்ளார்.

படியில் ஏறும் வேளையில், அக்கட்டிடத்தில் வசிப்பது போலவே பாவனைகாட்டி, குறித்த பெண்ணுடன் ஒருசில வார்த்தைகளையும் பேசியுள்ளார்.

பெண், தனது வீட்டுக்கதவினை திறந்த வேளை, அவரது வீட்டுக்கு அதிரடியாக புகுந்து பெண்ணை தள்ளி பணம் தருமாறு கோரியுள்ளதோடு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக பெண் சண்டையிட்டிருந்ததோடு, தன்னைக் காப்பாற்று மாறு சத்திமிட்டுள்ளார்.
பெண்ணின் சத்தத்தினை கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, குறித்த நபர் மகிழுந்து ஒன்றில் செல்வது காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தமது சக பணியாளருக்கு நடந்த கொடுமை கண்டு, அதிர்ச்சியடைந்ததோடு, கையடையாளங்கள் மூலம் மரணபணு விசாரணைகள் மூலம் குறித்த நபரை அடையாளங்கண்டுள்ளனர்.

குறித்த தீயணைப்பு வீரர், சம்பவ நாளன்று பணியில் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, 2012ம் ஆண்டு விவகாரத்து பெற்று, தனித்து வாழ்ந்து வருகின்றார் என தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?