FranceTAMILS

 Breaking News

மக்டோனால்ட் உணவில் உணரப்பட்ட Javel கழுவி !

மக்டோனால்ட் உணவில் உணரப்பட்ட Javel கழுவி !
décembre 09
19:29 2019

பரிசின் புறநகர் பகுதியான Aulnay-sous-Bois,McDonald’s du centre commercial O’Parinor ல் இருக்கின்ற மக்டோனால்ட் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட brownie கேக்கில் Javel நாற்றம் உணரப்பட்ட விடயம் அந்நிறுபவனத்துக்கு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதுடை Safia என்ற பெண்ணொருவர் Javel உணரப்பட்ட brownie உட்கொண்டதானால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், காவல்துறையில் முறைப்பாடொன்றினை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அப்பெண் தெரிவித்திருப்பதானது, நான் பொதுவாகவே மக்டோனால்ட் உணவகத்திற்கு செல்கின்ற வழக்கத்தினை கொண்டிருப்பதில்லை. ஆனால் அந்நாளில் எனது நண்பியின் வற்புறுத்தலுக்கு அமைய, ஒரு கோப்பியுடன், brownie சொக்கோலாவை வாங்கியிருந்தேன். அதனை உண்ட பொழுது, அதில் Javel நாற்றம் இருப்பதனை உணர்த்தேன். குறிப்பிட்ட சிறிய அளவு வயிற்றுக்குள் சென்றுவிட்டது. உடனடியாகவே உணவகத்தின் பொறுப்பாளருக்கு அதனை கொண்டு சென்று காட்டினேன்.
அவர் குறிப்பிட்டார், சற்று முன்னர்தான் கலந்த தண்ணீரினால் உணவகம் சுத்தம் செய்யப்பட்டது. சில வேளை இன் அளவு அதிகரித்ததனால், அதன் நாற்றம் படிந்திருக்கலாம் என்ற பொறுப்பாளரின் சமரசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மருத்துவசிகிச்சையினை நான் பெற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு இருந்தது உண்மை என்பது மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நான் இப்போது வக்கீல் மூலம் பிரச்சனையினை அணுகியுள்ளேன்.

 « Je suis allée aux urgences. J’avais des nausées, la gorge qui brûle, une réaction allergique sur le torse et le cou », décrit-elle, assurant qu’aujourd’hui encore, elle souffre de « remontées acides ».

Safia doit consulter un médecin ce jeudi. Dans l’intervalle, elle a déposé plainte pour « mise en danger d’autrui, risque immédiat de mort ou d’infirmité par violation manifestement délibérée d’une obligation réglementaire de sécurité ou de prudence ».

குறிப்பிட்ட பொறுப்பாளரினால் குப்பையில் போடப்பட்டுவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த உணவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் விசாரணைக்கு அழைக்கபட்டுள்ளார். பொறுப்பாளர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, உள்ளக விசாரணையொன்றினை நிறுவன உயர்பீடம் மேற்கொண்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?