FranceTAMILS

 Breaking News

காவல்துறையின் வன்முறை ! விசாரணைக்கு உத்தரவு !!

décembre 06
18:48 2019

தலைநகர் பரிசில் வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த ஊர்வலத்தின் போது, போராட்டக்காரர் ஒருவர் மீது, காவல்துறை மேற்கொண்டிருந்த வன்முறை தொடர்பில் Ploice de Police  என்று அழைக்கப்படுகின்ற காவல்துறை உயர்பீடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அமைதியாக இடம்பெற்றிருந்த ஊர்வலத்தின் இடையே, வன்முறையாளர்கள் என சொல்லப்படுகின்ற தரப்பினர், காவல்துறைக்கு எதிராக பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாது, தனியார்-பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியும் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையினை கலகம் அடக்கும் காவல்துறையினர் மேற்கொண்டிருந்த நிலையில், நபர் ஒருவர் மீது காவல்துறையினர் இருவர் கடுமையான வன்முறையினை பிரயோகிக்கும் காட்சி, பொதுமகன் ஒருவரினால் படம்பிடிக்கப்பட்டு சமூகவலைத்தளத்தில் பரவவிடப்பட்டிருந்தது.

இக்காட்சிகள் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிசின் boulevard Magenta பெருவீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?